கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

ஒரு இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'காட்டி' திரைப்படம் நாளை பான் இந்தியா வெளியீடாக வருகிறது. கிரிஷ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஜகபதி பாபு, ஜான் விஜய், சைதன்ய ராவ் மடாடி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் புரமோஷனுக்கு வருவதை அனுஷ்கா முழுவதுமாக தவிர்த்துவிட்டார். நேரில் வருவதற்கு அவர் ஏன் இவ்வளவு தயங்குகிறார் என்பது தெரியவில்லை. ஆனால், படம் குறித்து பத்திரிகையாளர்களுடன் தொலைபேசியில் மட்டும் பேசி பேட்டி கொடுத்துள்ளார். மேலும், நேற்று ரசிகர்களுடன் எக்ஸ் தளத்தில் சாட்டிங் செய்துள்ளார்.
அனுஷ்கா புரமோஷனுக்கு வராததை படக்குழுவும் குறையாக சொல்லவில்லை. படத்தின் இயக்குனர் கிரிஷ் கூட அது அனுஷ்காவின் விருப்பம் என்று சொல்லிவிட்டார். நேற்றைய எக்ஸ் சாட்டிங்கில் “படத்தின் கதையைக் கேட்டதும் பிரமித்துப் போய் விட்டேன். யெஸ் என்றோ, நோ என்றோ முதலில் சொல்லவில்லை,” என படம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்குப் பிறகு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடிப்பேன் என்றும் அனுஷ்கா தெரிவித்துள்ளார்.




