சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தமிழர்களையும், தமிழ் சினிமாவையும் எப்படிப் பிரிக்க முடியாதோ, அதேபோல் சின்னத்திரை ரசிகர்களையும் ஓடிடி தளத்தையும் பிரிக்க முடியாத அளவிற்கு இன்று இரண்டும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து விட்டது. திரையரங்குகள் தாங்கள் தவறவிட்ட சூப்பர் ஹிட் படங்களை அதே உற்சாகத்துடன் பார்க்க இந்த ஓடிடி தளங்கள் முக்கிய பங்குவகிக்கிறது. அந்த வகையில் இந்த வார ஓடிடி ரிலீஸ் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
கண்ணப்பா
பான் இந்தியா படமாகக் கடந்த ஜூன் 27ம் தேதி வெளியானது 'கண்ணப்பா' திரைப்படம். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்து இருந்தனர். இருவரும் இணைந்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த இந்த திரைப்படம், வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த திரைப்படம் இன்று(செப்.4ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
சரண்டர்
பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் மற்றும் சுஜித் சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சரண்டர்'. கவுதமன் கணபதி இயக்கத்தில் போலீஸ் விசாரணையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது. கடந்த ஆக.1ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், இன்று(செப்.4ம்) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியானது.
புட்டேஜ்
‛விடுதலை' நாயகி மஞ்சு வாரியர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'புட்டேஜ்'. த்ரில்லர் கதைக்கருவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்கில் வெளியானது. சைஜூ ஸ்ரீதரன் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் நாளை(செப்.5ம்) தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சூ ப்ரம் சோ
ஜெ.பி தும்மினாட் இயக்கத்தில், உருவான காமெடி திரைப்படம் 'சூ ப்ரம் சோ'. கன்னட திரையரங்கில் சூப்பர் ஹிட் அடித்த இந்த திரைப்படம், ரூ.120கோடி வரை வசூல் செய்தது என்று கூறப்படுகிறது. கன்னடம் தவிர்த்து தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் செப்டம்பர் 5 அல்லது 8ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் ராஜ் பி ஷெட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.




