'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

சினிமாவில் பிரபலமாக இருக்கும் முன்னணி ஹீரோக்களின் ரசிகர்கள் நாளுக்கு நாள் தங்களது அபிமானத்தை வெளிப்படுத்துகிறேன் என்கிற பெயரில் செய்யும் செயல்கள் அதிர்ச்சி தருவதாகவும் முகம் சுளிக்க வைப்பதாகவும் இருக்கின்றன. சமீபத்தில் கூட நடிகர் பாலகிருஷ்ணா தன்னுடைய பட வெளியீட்டின் போது, கிடாய் வெட்டி பலியிட்டு ரத்த அபிஷேகம் செய்த ரசிகர்களை இனி அதுபோல் உயிர்பலி செய்யக்கூடாது என்று கூறி வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் மகேஷ்பாபுவின் ரசிகர் ஒருவர் திரையரங்கு முன்பாக சமீபத்தில் கட்டப்பட்டிருந்த 'வாரணாசி' படத்தின் மகேஷ்பாபு போஸ்டர் முன்பாக நின்றுகொண்டு ஒரு பாட்டிலை எடுத்து தனது தலையில் உடைத்து, தலையில் வழிந்த ரத்தத்தால் போஸ்டரில் மகேஷ் பாபுவின் நெற்றிக்கு ரத்தத் திலகம் வைக்கிறார். அதன்பிறகு அவருக்கு தீபாராதனையும் காட்டுகிறார்.
இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஹீரோக்கள் தங்களது ரசிகர்களுக்கு ரொம்பவே கண்டிப்பும் கறாருமாக உத்தரவு போட்டால் கூட இவர்களின் செயல்களை தடுக்க முடியுமா என்று தெரியவில்லை.




