செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் காட்டி. இதில் தமிழ் நடிகர் விக்ரம் பிரபுவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து, விஎப்எக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட இருப்பதாக கூறி வந்த படக்குழு, அதன் பிறகு ஜூலை 11ம் தேதி வெளியிடுவதாக அறிவித்தனர். ஆனால் இப்போது படமாக்கப்பட்ட சில காட்சிகளில் திருப்தி இல்லை என்பதால் அந்த காட்சிகளை ரீசூட் பண்ண போகிறாராம் இயக்குனர். அதனால் இந்த படத்தின் ரிலீஸை தேதி குறிப்பிடாமல் மீண்டும் தள்ளி வைத்துள்ளார்கள். படத்தின் ரீசூட் காட்சிகள் மற்றும் பிஎப்எக்ஸ் பணிகள் முழுமையாக முடிவடைந்து அமேசான் பிரைமில் படத்தை வெளியிடும் தேதி முடிவான பிறகுதான் மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.