பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படம் ஆகஸ்ட் 14ல் ரிலீஸ் ஆகிறது. ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சிறப்பு வேடத்தில் அமீர்கான் நடித்துள்ளார். இருதினங்களுக்கு முன்னர் வெளியான சிக்கிட்டு பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜூலை இறுதியில் கூலி படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. ரஜினியின் 50வது ஆண்டில் வரும் படம் என்பதால் கூலி பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு பிளான் பண்ணுகிறதாம். இதில் அனிருத் பெர்பார்மன்ஸ் தவிர வேறு சில சிறப்பு விஷயங்களும் படத்தில் இருக்குதாம். கூலி படத்துக்கு இந்தியளவில் உள்ள பல முன்னனி ஹீரோக்களை அழைக்கவும் பிளான் இருக்குதாம். கூலியில் தெலுங்கில் இருந்து நாகர்ஜூனா, கன்னடத்தில் இருந்து உபேந்திரா, மலையாளத்தில் இருந்து சவுபின் நடிப்பது குறிப்பிடத்தக்கது.




