இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
செல்லா அய்யாவு இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான படம் 'கட்டா குஸ்தி'. அந்த படத்தில் குஸ்தி வீராங்கனையாக வரும் ஐஸ்வர்ய லட்சுமி நடிப்பு பாராட்டப்பட்டது. பல பெண்கள் மட்டுமல்ல, பல ஆண்டுகளும் அவர் நடிப்பை புகழ்ந்தனர். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த விஷ்ணு விஷாலே படத்தை தயாரித்ததால், அடுத்த பாகம் எப்போது பலரும் கேட்டனர். இப்போது 'கட்டா குஸ்தி 2' உருவாகிறது என்று முறைப்படி அறிவிப்பு வெளியாகிவிட்டது.
ஆனாலும், இப்போது சில படங்களில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்துவிட்டு 'கட்டா குஸ்தி 2'வுக்கு செல்ல பல மாதங்கள் ஆகும். படம் வெளியாக இன்னும் அதிக காலம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. அதே இயக்குனர் என்றாலும், 'கட்டா குஸ்தி 2'விலும் ஐஸ்வர்ய லட்சுமி ஹீரோயினாக தொடர்வாரா? வேறு ஹீரோயினாக என்ற டவுட்டும் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. பொதுவாக முதற்பாகத்தில் நடித்தவர்களே 2வது பாகத்தில் தொடர்வது வழக்கம். ஆனால், 'சாமி 2'வில் அது நடக்கவில்லை திரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். கட்டா குஸ்தி விஷயத்தில் அந்த மாற்றம் வராது என்று கூறப்படுகிறது.