டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

விஷால் நடித்த 'ஆக்ஷன்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. தொடர்ந்து 'ஜகமே தந்திரம், கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி, பொன் ஒன்று கண்டேன், மாமன், தக் லைப்' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'கட்டா குஸ்தி 2' படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுவதாக தற்போது ஐஸ்வர்ய லட்சுமி பதிவிட்டுள்ளார்.
‛‛சமூகவலைதளம் என்னிடமிருந்த நிஜ சிந்தனையை பறித்தது. சொற்கள் மற்றும் மொழியை பாதித்தது, எளிய இன்பத்தையும் மகிழ்ச்சியற்றதாக மாற்றியது. வாழ்க்கையில் மேலும் அர்த்தமுள்ள தொடர்புகளையும் சினிமாவையும் உருவாக்குவேன் என்று நம்புகிறேன். நான் அர்த்தமுள்ள சினிமாவை உருவாக்க முடிந்தால் எனக்கு பழைய பாணியில் உங்களுடைய அன்பைக் கொடுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை அனுஷ்கா, சமூக வலைத்தளங்களிலிருந்து கொஞ்சம் இடைவெளி எடுக்கிறேன் என நேற்று பதிவிட்டிருந்தார். ஆனால், ஐஸ்வர்ய லட்சுமி மொத்தமாக விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.
இன்றைய யுகத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் அவர் எவ்வளவு காலம் விலகியிருப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.