ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
மலையாள சினிமாவின் முக்கியமான ஆளுமையாக இருந்தவர் பிரேம் நசீர். 600 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர். பிரேம் நசீரின் சொந்த ஊர் திருவனந்தபுரம் அருகே உள்ள சிராயின்கீழ் புளிமூடு ஆகும். சினிமாவில் பெரிய இடத்துக்கு வந்த பிறகு இந்த ஊரில் பிரேம் நசீர் சொந்த வீடு கட்டி, அதற்கு லைலா காட்டேஜ் என்று பெயர் சூட்டி, அங்கு 30 ஆண்டுகள் வரை தன் குடும்பத்தினருடன் வாழ்ந்தார்.
பின்னர் இந்த வீட்டை அவரது மகள் ரீத்தாவுக்கு கொடுத்தார். தற்போது ரீத்தா தனது மகளுக்கு கொடுத்தார். ஆனால் தற்போது இவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இதனால் இந்த வீடு பராமரிப்பின்றி பாழடைந்து வருவதால் இதனை ரீத்தாவின் குடும்பத்தினர் விற்க முடிவு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீட்டை கேரள அரசே வாங்கி பிரேம் நசீரின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. 60 வருடங்களுக்கு பிறகும் இந்த வீடு சிறிதும் சேதமில்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரேம் நசீர், 520க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்ததற்காகவும், ஒரே ஹீரோயினுக்கு (ஷீலா) ஜோடியாக 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததற்காகவும் இரண்டு கின்னஸ் உலக சாதனை படைத்தவர்.