மறைந்த ஆஷா போஸ்லேவின் பிறப்பும் திரை வாழ்க்கையும் | பிரபல திரைப்பட பாடகி ஆஷா போஸ்லே காலமானார் | 'ஜனநாயகன்' லீக், சைபர் கிரைம் விசாரணை ஆரம்பம் | பிஸியான நடிகையாக கயாடு லோஹர் | 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சிகிரி சிகிரி' பாடல் | புதுமணத் தம்பதியை வரவேற்ற 'ரணபாலி' குழு | 'ஜனநாயகன்' லீக்: கலையை காக்க நடிகர் சங்கம் வேண்டுகோள் | மும்பை திரையரங்குகளில் 300 கோடியை தாண்டிய முதல் இந்திய திரைப்படம் 'துரந்தர்-2' | மே 14ம் தேதி புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் மணிரத்னம்! | ஏப்ரல் 16ல் ஓடிடியில் வெளியாகும் 'யூத்' |

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான 'கேஜிஎப் 2' படம் ரூ.1100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஜி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தார்கள். கேஜிஎப் படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கேஜிஎப் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது, "கேஜிஎப் 2 குழுவினருக்கு வாழ்த்துக்கள். யஷ் வெறித்தனமான நடிப்பு மற்றும் உழைப்பு மூலம் ரசிகர்களை காந்தம் போல ஈர்க்கிறார். சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஜி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். ரவி பாஸ்ரூரின் சிறந்த இசை மற்றும் புவன் கவிதாவின் அற்புதமான காட்சியமைப்பு. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மரியாதை. பிரசாந்த் நீல் அவர்களுக்கு எனது மரியாதை. ஒரு சிறப்பான சினிமா அனுபவத்திற்காகவும், இந்திய சினிமாக் கொடியை உயரப் பறக்க வைத்ததற்கும் அனைவருக்கும் நன்றி. கேஜிஎப் 2" என்று தெரிவித்துள்ளார்.