விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனின் தம்பியும், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இளைய மகனுமான நடிகர் அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் நேற்று ஐதராபாத்தில் நடந்துள்ளது. அதில் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினரான சிரஞ்சீவி குடும்பத்தினர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மணப் பெண் நயனிகா, அல்லு சிரிஷ் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் திருமணத் தேதி உள்ளிட்ட விவரங்கள் வெளியாக உள்ளது.
சமீபத்தில் சிரஞ்சீவியின் மருமகளும், ராம் சரணின் மனைவியுமான உபாசானா கொன்னிடலாவுக்கு இரண்டாவது பிரசவத்திற்கான வளைகாப்பு நிகழ்வு நடைபெற்றது. அதில் அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை என ஒரு சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நேற்றைய நிகழ்வில் சிரஞ்சீவி குடும்பத்தினர் கலந்து கொண்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.




