ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா |

மதறாஸ் மாபியா கம்பெனி என்ற படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார் வில்லன் நடிகர் ஆனந்தராஜ். சென்னையில் நடந்த இந்த பட விழாவில் அவருடன் சென்னை திரைப்படக் கல்லுாரியில் படித்த இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆனந்தராஜை வாழ்த்தினர். கல்லுாரி காலங்களில் அவர் எப்படி இருப்பார் என்றும், தங்களின் முதல் படத்தில் அவரை நடிக்க வைத்த அனுபவம் குறித்து விரிவாக பேசினார்கள்.
ஆனந்த்ராஜ் பேசுகையில் ''நான் சினிமா பின்புலம் இல்லாமல் வந்தேன். நடிக்க வந்துவிட்டோம், எப்படி ஜெயிக்கப் போகிறோமோ என்று பயப்படுவேன். அந்த காலத்தில் சொந்த ஊருக்கு போகவே யோசிப்பேன். ஆர்.வி.உதயகுமார் தனது முதல் படத்தில் என்னை நடிக்க வைத்து கொடுமைப்படுத்தினார். கடும் காய்ச்சலில் இருந்தபோது பல மாடிகள் ஓட வைத்து படப்பிடிப்பு நடத்தினார். என் நண்பன் ஆர்.கே.செல்வமணியும் அப்படிதான். ஆனாலும், அப்படி கஷ்டப்பட்டு நடித்தது என்னை உறுதி ஆக்கியது.
ஒரு நாள் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென 'உங்க போர்ஷன் முடிந்தது, வீட்டுக்கு போங்க என்றார்கள். அடுத்து 2 நாட்கள் படப்பிடிப்பு கிடையாது என்றார்கள். அப்போது என் அப்பா மறைந்த தகவல் வந்தது. நான் நடிப்பில் ஜெயிக்க உறுதுணையாக இருந்தவர் அப்பா. அவர் இறுதிசடங்கில் நான் கூடவே இருக்கணும். வேறு எந்த வேலையும் இருக்கக் கூடாது என நினைத்து, அவரே இப்படி லீவு வாங்கிக் கொடுத்து இருக்கிறார் என நினைத்தேன். நான் பல வலி, வேதனைகள், ஏமாற்றங்கள் தாங்கி இந்த இடத்துக்கு வந்துவிட்டேன். என் முதுகில் அவ்வளவு காயங்கள். கடந்த 40 ஆண்டுகளாக, 400 படங்களில் நடித்து இருக்கிறேன். என் அப்பாவை மறக்க முடியவில்லை' என்று மேடையிலே கண் கலங்கினார்.