தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன்முதலாக நடித்துள்ள படம் ‛கூலி'. இந்த படத்தில் ரஜினியுடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நாகார்ஜுனா குறித்து ரஜினி கூறுகையில், நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாக நடிக்கிறது என்று அஜித் வசனம் பேசியது போன்று, நாகார்ஜுனாவும் எவ்வளவு காலம் தான் நல்லவனாக நடிப்பது என்று இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். குறிப்பாக கமல்ஹாசனே ஆச்சரியப்பட கூடிய அளவுக்கு நாகார்ஜுனா இந்த கூலி படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறினார் ரஜினி.
அதையடுத்து நாகார்ஜுனா பேசும்போது, ‛‛இந்த கூலி படம் ஏற்கனவே ரஜினி நடித்த பாட்ஷா படத்தை போன்ற 100 பாட்ஷாவுக்கு சமம். அவர்தான் எப்போதுமே ஒரிஜினல் சூப்பர் ஸ்டார்'' என்று பேசினார். அதையடுத்து இந்த கூலி படத்தில் நடித்திருக்கும் கன்னட நடிகர் உபேந்திரா பேசும் போது, ‛‛கோலிவுட், பாலிவுட், டோலிவுட், சான்டல்வுட் என அனைத்து சினிமாக்களிலும் பல ஸ்டார்கள் இருக்கிறார்கள். அவர்களை ரசிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். ஆனால் ரஜினி படம் வந்தால் மட்டும் பேன்ஸ் மட்டுமின்றி ஸ்டார் நடிகர்களும் கூட பேன்ஸ் ஆகி விடுகிறோம். அப்படித்தான் ரஜினி நடித்துள்ள ஒவ்வொரு படங்கள் வரும் போதும் நாங்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கிறோம்'' என்று பேசினார் உபேந்திரா.