மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தமிழின் முன்னணி நடிகரான தனுஷ், ஹிந்தியில் 2013ல் வெளிவந்த 'ராஞ்சனா' படம் மூலம் அறிமுகமானார். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் சோனம் கபூர், அபய் தியோல் மற்றும் பலர் நடித்த அந்தப் படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தின் கிளைமாக்சில் தனுஷ் இறந்துவிடுவார்.
அப்படத்தைத் தற்போது ரீரிலீஸ் செய்து வெளியிட்டுள்ளனர். ஆனால், 'ஏஐ' மூலம் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் உயிர்பிழைப்பதாக மாற்றியுள்ளார்கள். அப்படி மாற்றப்பட்ட கிளைமாக்ஸுக்கு படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் அவரது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். அவரோ அவரது குழுவினரோ அந்த கிளைமாக்ஸ் மாற்றத்தில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தின் நாயகனான தனுஷ் இது குறித்து அறிக்கை ஒன்றை நேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "ராஞ்சனா' படத்தின் ஏஐ-ஆல் மாற்றப்பட்ட முடிவுடன் கூடிய மறு வெளியீடு என்னை முற்றிலும் கலக்கமடையச் செய்துள்ளது. இந்த மாற்று முடிவு படத்தின் ஆன்மாவையே பறித்துவிட்டது, மேலும் எனது தெளிவான எதிர்ப்பையும் மீறி சம்பந்தப்பட்டவர்கள் இதை முன்னெடுத்தனர். இது 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் உறுதியளித்த படமல்ல.
படங்கள் அல்லது உள்ளடக்கத்தை மாற்ற ஏஐ பயன்படுத்துவது கலை மற்றும் கலைஞர்களுக்கு மிகவும் கவலை தரும் முன்மாதிரியாக உள்ளது. இது கதை சொல்லலின் ஒருமைப்பாட்டையும், திரைப்படத்தின் பாரம்பரியத்தையும் அச்சுறுத்துகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற நடைமுறைகளைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.