3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி | கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி | எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு யு டியுப் தளத்தில் வெளியானது. நேற்று இரவுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழ் டிரைலர் 14.6 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. தெலுங்கு டிரைலர் 4.6 மில்லியன், ஹிந்தி டிரைலர் 4.2 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளன.
லோகேஷ் - ரஜினி கூட்டணி முதல் முறை இணைந்த படம் என்பதால் முந்தைய தமிழ் டிரைலர்களின் சாதனையை இந்த டிரைலர் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினியின் 'ஜெயிலர்' சாதனையை மட்டுமே இந்த டிரைலர் முறியடித்துள்ளது. 'ஜெயிலர்' டிரைலர் 24 மணி நேரத்தில் 10.4 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. அதைவிட கூடுதலாக 4 மில்லியன் பார்வைகளை 'கூலி' டிரைலர் பெற்றுள்ளது.
லோகேஷ் - விஜய் கூட்டணி இணைந்த 'லியோ' டிரைலர் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. அதில் பாதியளவுக்கும் குறைவாகத்தான் 'கூலி' டிரைலர் பார்வைகளைப் பெற்றுள்ளது. யு டியுப், சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரையில் விஜய் ஏற்படுத்தும் சாதனை, ரஜினியின் சாதனைகளை விட அதிகமாகவே இருக்கிறது.