நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

தற்போது தமிழில் ‛கூலி, மதராஸி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜெயிலர்- 2, ஜனநாயகன்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைக்கும் அனிருத், தெலுங்கில் ‛கிங்டம்' படத்தை அடுத்து ‛தி பாரடைஸ், டாக்ஸிக், கிங்' என பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், அனிருத் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், தனக்கு தேவைப்படும்போது ‛சாட் ஜிபிடி'-ஐ பயன்படுத்தி தான் இசையை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, ‛‛சமீபத்தில் ஒரு பாடலுக்கு என கம்போசிங்கில் நான் ஈடுபட்டிருந்த போது இரண்டு வரிகளில் சிக்கிக்கொண்டேன். அப்போது அதை சாட் ஜிபிடி-க்கு எடுத்துச் சென்று சந்தா வாங்கி ஏஐ இடம் எனக்கு உதவுமாறு கேட்டேன். அப்போது சாட் ஜிபிடி எனக்கு சுமார் 10 ஆப்ஷன்களை வழங்கியது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து எனது இசைப் பணியை தொடர்ந்தேன்'' என்று வெளிப்படையாக கூறியுள்ளார் அனிருத்.
அதோடு சில சமயங்களில் சரியான இசை தொகுப்புகள் கிடைக்காமல் தவிக்கும் போது இதுபோன்று ஏஐ-யின் உதவியை நாடுவதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை என்கிறார் அனிருத்.