கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு | 'டிராகன்' 100வது நாள் விழாவுக்கு 'ஆப்சென்ட்' ஆன ஹீரோயின்ஸ் | கலைத் துறையின் மாஸ்டர் : கமல்ஹாசனுக்கு பவன் கல்யாண் வாழ்த்து | 15 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அஜித், சரண் கூட்டணி | 2027ம் ஆண்டில் வெளியாகும் ‛பிச்சைக்காரன் 3' | தமிழில் ரீ-மேக் ஆகிறது தெலுங்கு ‛கோர்ட்' | விஜய் பட இயக்குனருடன் கைகோர்க்கும் அமீர் கான் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர் கான். தங்கல் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் பல ஆண்டுகளாக வெற்றி படத்திற்காக காத்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான 'சித்தாரே ஜமீன் பார்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
சமீபத்தில் அமீர் கான் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதை உறுதிபடுத்தினார். இந்த படம் எப்போது துவங்கும் என தெரியவில்லை. இதற்கிடையில் அமீர்கானை வைத்து தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ ஒரு படத்தை தயாரிக்க போகிறாராம். இதை விஜயை வைத்து வாரிசு, மகேஷ் பாபுவை வைத்து ‛மகரிஷி' போன்ற படங்களை இயக்கிய வம்சி பைடப்பள்ளி இயக்குகிறார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.