வராது... ஆனா வரும்! பாஸ்கியுடன் ஒரு 'கலகல' | இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் 'மதராஸி' | தீபாவளி போட்டியில் இதுவரையில் 5 படங்கள் | மலையாள தேசத்தில் தமிழ் பாடும் குஜராத்தி... நடிகை சரண்யா ஆனந்த் | மெல்ல மெல்ல முன்னேறுவேன் : சஷ்டிகாவின் கனவு | எனக்குத் தெரிந்த அரசியல் இது தான்..! : பாலா பேட்டி | என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா |
தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். ஆந்திராவில் மரேடுமல்லி காட்டுப்பகுதியில் நடைபெற்று வந்த இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கனமழை காரணமாக காக்கிநாடா பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாம்.
இதனை தொடர்ந்து புதிய லொக்கேசனுக்கு காரில் பயணித்த அல்லு அர்ஜுன், வழியில் சாலையோரத்தில் கூரை வேய்ந்த சாதாரண ஹோட்டல் ஒன்றை கண்டதும் காரை நிறுத்த சொல்லி, அங்கே உணவருந்தினார். அதன்பின் வெளியே வந்த அவர், கடைக்காரர் வேண்டாம் என்று மறுத்தும் அவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு கிளம்புகிறார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. சாலையோர கடையில் சாப்பிட்ட அல்லு அர்ஜுனின் எளிமையை அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.