இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியாபட், அஜய்தேவ்கன், சமுத்திரகனிஉள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஜனவரியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவலால் படப்பிடிப்பு தடைப்பட, பட வெளியீட்டை அக்டோபர் மாதத்துக்கு மாற்றினர். இந்நிலையில், கொரோனா 2வது அலை தீவிரத்தால் பல மாநிலங்களில் தியேட்டர்கள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. இதனையடுத்து மீண்டும் வெளியீட்டை படக்குழு ஒத்திவைத்துள்ளது.
‛போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளது. அக்டோபரில் அனைத்துப் பணிகளும் முடிந்தாலும், திட்டவட்டமாக ஒரு வெளியீட்டு தேதியை கூற முடியவில்லை. திரையரங்குகள் முழுமையாக திறந்து உலக சினிமா வர்த்தகம் சகஜநிலைக்கு திரும்புகையில், எத்தனை முன்னதாக வெளியிட முடியுமோ அத்தனை முன்னதாக படத்தை வெளியிடுவோம்,' என அறிவித்துள்ளனர்.