''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள பிரம்மாண்டமான வரலாற்று படம் 'மரைக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம்'. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வீரதீர சாகச வரலாறாக இந்தப்படம் உருவாகியுள்ளது. இதில் மரைக்காயர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், பிரணவ் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், அசோக்செல்வன், சுகாசினி உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.
கடந்த வருடம் மார்ச்-26ஆம் தேதியே ரிலீஸாக வேண்டிய இந்த படம், கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிப்போனது. அதன்பின் இந்த வருடம் மார்ச் 26-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர், ஓணம் பண்டிகை ரிலீசாக அறிவிக்கப்பட்டது..
இதற்கிடையே கடந்த மாதம் மோகன்லால் நடிப்பில் ஒடிடியில் வெளியான த்ரிஷ்யம்-2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், அதே ஜோரில் மரைக்கார் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து விடலாம் என திட்டமிடப்பட்டு, மீண்டும் முன்கூட்டியே மே-13ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதியை மாற்றினார்கள்..
ஆனால் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால், தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. இதையடுத்து மீண்டும் சில மாதங்களில் நிலைமை சரியாகி விடும் என்கிற நம்பிக்கையில், தற்போது படத்தை ஆகஸ்ட்-12ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர்..
ஒடிடியில் இந்தப்படத்தை வெளியிடும் வாய்ப்புகள் தேடி வந்தது. இருந்தாலும் வரலாற்று படம் என்பதால் அதன் பிரமாண்டத்தை தியேட்டர்களில் தான் ரசிகர்கள் முழுமையாக பார்த்து ரசிக்க முடியும் என, தியேட்டர் ரிலீஸுக்காக இப்படி ரிலீஸ் தேதியை மாற்றி மாற்றி அறிவித்து வருகின்றனர்..