கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் |

மலையாளத்தில் குறிப்பிடத்தக்க இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் உன்னி முகுந்தன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழில் சசிகுமார், சூரி நடித்த 'கருடா' படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுக்களை பெற்றவர். மலையாளத்தில் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வரும் இவர், தற்போது 'மார்கோ' என்கிற படத்தில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படம் வெளியானது. ஹனீப் அதேனி என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் அதிக அளவில் வன்முறை காட்சிகள் நிறைந்ததாக இருந்ததால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. குறிப்பாக இந்த படத்தில் ஏழு சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஏழுமே அதிகபட்ச வன்முறை காட்சிகளாக தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரவேற்பை பெற்றுள்ளது.
அதே சமயம் பெண்களின் கூட்டம் இந்த படத்திற்கு குறைவாகவே இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் படம் பார்த்தபோது தனக்கு நேர்ந்த தனது அனுபவத்தை எழுதியிருந்தார்.
அதில் அவர் கூறும்போது, “இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறை காட்சிகளை பார்க்கும்போது பாலிவுட்டின் அனிமல் மற்றும் கில் ஆகிய படங்கள் எல்லாம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது. அந்த அளவிற்கு இதில் உச்சபட்ச வன்முறை. இப்படி வன்முறை கட்சிகள் நிறைந்த ஒரு படம் இதற்கு முன் வந்திருக்குமா என்பது சந்தேகம் தான். படத்தின் நாயகனை விட வில்லன் தான் ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு மிரட்டி இருக்கிறார்.
ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள் நிறைய உண்டு. என் அருகில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண் ஒரு கட்டத்தில் இந்த காட்சிகளை பார்க்க சகிக்காமல் என் பக்கம் திரும்பி வாமிட் எடுத்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் இந்த படத்தை பார்க்காமல் இருப்பது நல்லது. ஆனால் ஆக்சன் விரும்பிகளுக்கு இது ஒரு நல்ல தீனி போடும் படம்” என்று கூறியுள்ளார்.




