அல்லு அர்ஜுன் மீது மீண்டும் காவல்துறையில் ஒரு புகார் | குழந்தைகளுடன் ஒன்றாக திருமண நிகழ்வில் கலந்து கொண்ட சூர்யா-ஜோதிகா | விஜய் சார், உங்க முன்னாடி நாங்க குழந்தைங்கதான் - வருண் தவான் | தனுஷை நோக்கி படையெடுக்கும் புதிய பட வாய்ப்புகள் | விமர்சனங்களுக்கு மத்தியில் 100 கோடியை நெருங்கும் 'முபாசா' | கணவர், குழந்தைகளுடன் பாரிஸிற்கு சுற்றுலா சென்ற நயன்தாரா | இளம் வயதில் இரவு முழுக்க குடிப்பேன் - அமீர் கான் ஓபன் டாக் | என் பெயரை பயன்படுத்தி அரசு திட்டத்தில் மோசடி : கண்டித்த சன்னி லியோன் | மீண்டும் இணையும் அஜித் - ஆதிக் கூட்டணி | வளர்ப்பு நாய் இறப்பு: திரிஷா வருத்தம் |
தெலுங்கானா மாநிலத்தில் பெரிய படங்களுக்கான டிக்கெட் கட்டண உயர்வு ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் அம்மாநில அரசு அறிவித்தது. பெரிய படங்கள் வெளியாகும் போது அவற்றிற்கு சுமார் ஒரு வார காலத்திற்கு டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி அரசு அனுமதி அளித்து வந்தது.
'புஷ்பா 2' படத்தின் பிரீமியர் காட்சியின் போது நடைபெற்ற கூட்ட நெரிசல் காரணமாக, இனி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கிடையாது, டிக்கெட் கட்டண உயர்வு கிடையாது என அம்மாநில அரசு அறிவித்தது.
இதை தற்போது தெலுங்கானா மாநில தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. நேற்று அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து இதை அறிவித்தனர்.
“ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு விதமான டிக்கெட் கட்டணம் என்பது படம் வெளியான முதல் நான்கு நாட்களில் படம் பார்க்க வரும் நடுத்தர வர்க்கத்தினர், மாணவர்கள், ரசிகர்கள், சிறிய வேலை செய்பவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. அவர்களால் அதிகக் கட்டணங்களைக் கொடுத்து படங்களைப் பார்க்க முடியாத நிலை இருந்தது. இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
டிக்கெட் கட்டண உயர்வு எல்லா நாட்களிலும் இருக்கிறது என பலர் படங்களைப் பார்க்க வராமல் இருந்தனர். அது திரைப்பட வசூலைப் பாதித்தது. தற்போதைய அறிவிப்பால் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவார்கள். ஒரே விதமான டிக்கெட் கட்டணம் இருந்தால்தான் மக்களும் படம் பார்க்க வருவார்கள்.
சில தயாரிப்பாளர்கள் அவர்களது படங்களுக்கு அதிக செலவாகிவிட்டது என டிக்கெட் கட்டணங்களை உயர்த்த நெருக்கடி கொடுத்தனர். அதனால், தியேட்டர்களுக்கு மக்கள் வருவது குறைந்து போனது. தெலுங்கானா அரசு எடுத்துள்ள முடிவு போலவே ஆந்திர மாநில அரசும் முடிவெடுக்க வேண்டும்,” என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.