'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாளத்தில் கடந்த வாரம் வெளியான படங்களில் ககனாச்சாரி படமும் ஒன்று. அனு சந்து என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ஒரு சயின்ஸ் பிக்சன் காமெடி படமாக உருவாகி இருந்தது. குறைந்த பட்ஜெட்டில் தரமான வி.எப்.எக்ஸ் பணிகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பிக்கப் ஆகி வருகிறது.
தற்போது படம் வெளியாகி ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ககனாச்சாரி யுனிவர்ஸ் என்கிற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வென்று திருச்சூர் எம்பி ஆக வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ்கோபியும் இந்த இரண்டாம் பாகத்தில் மணியன் சித்தப்பா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் தனது பிறந்த நாளன்று இந்த படத்தில் தனது கதாபாத்திர போஸ்டருடன் கூடிய அறிவிப்பை சுரேஷ்கோபியே வெளியிட்டார். இதன் முதல் பாகத்தில் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ் கதாநாயகனாக நடித்திருந்ததால், அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் படக்குழுவினரை உற்சாகப்படுத்தவும் இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சுரேஷ்கோபி ஒப்புக்கொண்டுள்ளார் என்றே தெரிகிறது.