இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
மலையாள நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி நடிப்பில் மலையாளத்தில் உருவாகி இருக்கும் படம் ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா). இந்த படம் கடந்த ஜூன் 27ம் தேதி வெளியாக இருந்த நிலையில் சென்சார் தரப்பில் இருந்து இந்த படத்தின் டைட்டிலில் இடம் பெற்று இருக்கும் ஜானகி என்கிற பெயரை நீக்குமாறு வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டது. இதனால் சென்சார் சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. மறு தணிக்கை செய்ய ரிவைஸிங் கமிட்டிக்கு இந்த படம் அனுப்பப்பட்டும் இதே காரணம் சொல்லி சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல தயாரிப்பாளர்கள் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தற்போது இதன் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என் நகரேஷ், “ஜானகி என்கிற பெயரை எதற்காக நீக்க வேண்டும் என்கிறீர்கள்? ஏற்கனவே இதே போன்ற பெயர்களில் படங்கள் வந்திருக்கின்றது. இத்தனைக்கும் அது ஒன்றும் குற்றவாளிக்காக வைக்கப்பட்ட பெயர் இல்லையே. ? மீதிக்காக போராடும் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வைக்கப்பட்ட செயல்தானே ? சினிமாவை அடக்கி ஆள நினைக்கிறீர்களா?” என சென்சார் வாரியத்திற்கு நீதிபதி நாகராஜன் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் வரும் சனிக்கிழமை இந்த படத்தின் பிரத்யேக காட்சியை நீதிபதி என் நகரேஷ் பார்க்க இருக்கிறார். படத்தைப் பார்த்துவிட்டு அதன்பிறகு இந்த வழக்கில் தனது தீர்ப்பை அவர் கூற இருப்பதாக சொல்லப்படுகிறது.