போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! |
தங்க மீன்கள் , குற்றம் கடிதல், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, தரமணி உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ஜே. சதீஷ் குமார். 'தரமணி' படத்தில் நடிகராக அறிமுகமாகி, கபடதாரி, பிரெண்ட்ஷிப், அநீதி, வாழை உள்பட பல படங்களில் நடித்தார்.
இந்தநிலையில் அவர் இயக்குனராக மாறி இயக்கிய 'பயர் 'என்ற படம் கடந்த பிப்ரவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படத்தின் 50வது நாள் விழாவை .சதீஷ் குமார் கொண்டாடினார். விழாவில் இயக்குனர் ராம் கலந்து கொண்டு படத்தில் பணியாற்றியவர்களுக்கு கேடயம் வழங்கினார்.
சதீஷ்குமார் கூறும்போது "இந்த ஆண்டு சுமார் 80 படங்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் 'டிராகன்', 'குடும்பஸ்தன்' உள்ளிட்ட வெகு சில திரைப்படங்களே லாபத்தை ஈட்டியுள்ளன. 'பயர்' வெற்றியை ஈட்டியுள்ளது கதையையும் திறமைகளையும் மட்டுமே நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் பெரும் நம்பிக்கையை ஊட்டி உள்ளது. நல்ல உள்ளடக்கத்தை தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஏற்பார்கள் என்பதற்கு 'பயர்' வெற்றியே சாட்சி. தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து, இயக்குவதோடு மட்டுமில்லாமல், சவாலான வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.