கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
மலையாளத்தில் உருவான கேரள ஸ்டோரி என்கிற படம் கடந்த 2023ல் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை இந்தியா முழுவதிலும் ஏற்படுத்தியது. அப்பாவி இந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வெளிநாட்டில் உள்ள ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் குழுவிற்கு அனுப்பி வைக்கும் கும்பலை பற்றிய ஒரு கதையாக உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது. சுதீப்தோ சென் என்பவர் இயக்கியிருந்த இந்த படத்தில் கதாநாயகியாக அடா சர்மா நடித்திருந்தார்.
இந்த படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய பெயரும் புகழும் கிடைத்தது. ரசிகர் வட்டமும் அதிகமானது. அதன்பிறகு 1920, கமாண்டோ, மற்றும் சன் பிளவர் வெப்சீரிஸ் ஆகியவற்றில் நடித்தார் அடா சர்மா. இந்த நிலையில் அவரது தீவிர ரசிகர் ஒருவர் ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியத்தை வரைந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். சன் பிளவர் 2 வெப் சீரிஸில் அவர் நடித்த ரோஸி என்கிற கதாபாத்திரத்தை தான் அந்த ரசிகர் ஓவியமாக வரைந்து உள்ளார்.
ரசிகர் வரைந்த இந்த ஓவியம் குறித்து அடா சர்மா கூறும்போது, “என்னுடைய படங்களில் நான் நடித்த கதாபாத்திரங்களை மக்கள் இந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நான் ஆசீர்வதிக்கப்பட்டவள் ஆக உணர்கிறேன். அந்த ரசிகரின் ஓவியத்தை நான் ரொம்பவே நேசிக்கிறேன். அதேசமயம் எனக்காக இப்படி ரசிகர்கள் தங்கள் ரத்தத்தை பயன்படுத்தி ஓவியம் வரைவது போன்று செயல்களில் ஈடுபட வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.