2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவரான நடிகை அடா சர்மா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். கதக், சல்சா, ஜாஸ், பாலே நடனங்களில் தேர்ந்தவரான அடா சர்மா 2008ல் வெளிவந்த '1920' ஹிந்திப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தமிழில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து வெளிவந்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்பாகவே தெலுங்கு, கன்னடப் படங்களில் அறிமுகமானார்.
தமிழில் 'சார்லி சாப்ளின் 2' படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். தற்போது ஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“க்ஷனம்' படம் வெளிவந்து 5 வருடங்கள் ஆனதால், தெலுங்கில் 5 படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளேன் என்பதைத் தெரிவிக்க ஆசைப்படுகிறேன். எந்த மொழியிலும் நான் ஏதாவது பரீட்சார்த்த முயற்சியில் செய்யும் போது எனக்கு அன்பையும், ஆதரவையும் அளிக்கிறீர்கள். தற்போது நான் நடித்து வரும் படங்கள் முந்தையப் படங்களில் இல்லாத ஒன்றாகும்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு தமிழ் நடிகைக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை வழங்கு நம் இயக்குனர்கள் முன் வரவில்லை. ஆனால், அவரோ தெலுங்கில் ஒரே சமயத்தில் ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.