டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? |
தமிழை விட தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தெலுங்கில் அவர் நடிக்க வந்து இன்றுடன் 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
தமிழில் சிம்பு, த்ரிஷா நடித்து வெளிவந்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வடிவமான 'ஏ மாய சேசவே' படம் தான் அவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படம். தனது காதல் கணவரான நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த படம். தமிழைப் போலவே தெலுங்கிலும் அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
அதன்பின் தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் அவர் நடித்துள்ளார். 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்திலும் கிளைமாக்சில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். ஆனால், தமிழில் அவர் கதாநாயகியாக அறிமுகமான 'பாணா காத்தாடி' படம் ஆகஸ்ட் 2010ல்தான் வெளிவந்தது.
தெலுங்கில் 11 வருடங்களை நிறைவு செய்ததை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “நன்றி கௌதம் மேனன் சார், என்னுள் ஏதோ இருக்கிறது எனப் பார்த்ததற்கு நன்றி. அது என்னவோ, எனக்குள் அதை நான் பார்த்ததில்லை. இதைப் படிக்கும் அனைவருக்கும் நன்றி, இந்த உலகத்தில் மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக என்னை உருவாக்கியிருக்கிறீர்கள்,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், படத்தின் தயாரிப்பாளர் மஞ்சுளா, அப்படத்தின் நாயகனும், தன்னுடைய கணவருமான நாகசைதன்யாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
சமந்தாவிற்கு பல சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.