நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா | விஜய்யைத் தொடர்ந்து சூர்யா படத்தில் பூஜா ஹெக்டே | முதல் விளம்பரப் படத்தை நினைவு கூர்ந்த ஆண்ட்ரியா | மீண்டும் வருவது மகிழ்ச்சி - சித்தார்த் | முகம் வீங்கிப்போன ரைசா - ஏன் என்னாச்சு? | புதிய படங்களின் வெளியீடுகள் தள்ளிப் போகுமா? | பிரபாஸ் படத்தில் அமிதாப் | விவேக் குடும்பத்தினர் நன்றி | சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் ஆண்டனி | கவர்ச்சி போட்டோக்களை அள்ளி வீசும் சாக்ஷி |
நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. அந்தவகையில் அவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். இந்த நிலையில், அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள தயாராகி விட்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது.
இந்த நிலையில், தற்போது வருகிற மார்ச் மாதத்தில் நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நேற்று முதல் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் பரபரப்பாகி வருகிறது. ஆனால் வழக்கம்போல் இந்த செய்தி குறித்து அவர்கள் இருவரும் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதனால் இந்த செய்தியாவது உண்மையாகுமா? இல்லை இதுவும் வழக்கம்போல் வதந்திதானா? என்பது விரைவில் தெரியவரும்.
மேலும், நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகும் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் தற்போது நாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதோடு, அவர்கள் இருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்ற பேனரில் சில சிறிய பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறார்கள்.