மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் ஒரு கட்டத்தில் ஹீரோ ஆனார். பல வெற்றி படங்களை கொடுத்தார். ஆனால், சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. அவர் சொந்தமாக தயாரித்து நடித்த 'கிங்ஸ்டன்' படமும் கூட கையை கடித்தது. அதேசமயம், அவர் இசையமைத்த படங்கள் வெற்றி பெற்றன. இதனால் ஹீரோவாக ஒரு வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்பது அவரின் ஆசையாக இருந்தது. வரும் மார்ச் 27ம் தேதி அவர் ஹீரோவாக நடித்த 'ஹேப்பிராஜ்' ரிலீஸ் ஆகிறது. மரியா இயக்கியுள்ளார்.
இந்த படம் குறித்து பேசிய ஜிவி பிரகாஷ், 'புதுமுக இயக்குனர், புதுமுக தயாரிப்பாளர் என முதலில் பயந்தேன். அந்த ஏரியாவை விற்று கொடு, சாட்டிலைட், டிஜிட்டல் விற்று கொடு என பிரஷர் கொடுப்பார்களோ என நினைத்தேன். ஆனால், அவர்கள் சிறப்பாக திட்டமிட்டு படத்தை முடித்து விட்டார்கள். அனைத்தையும் விற்று லாபத்தில் படத்தை வெளியிடுகிறார்கள்' என்று பேசியுள்ளார். அவர் இசையமைப்பாளராக பணியாற்றிய யூத் படம் இந்த வாரம் வெளியாகிறது. அந்த படமும் பிஸினஸ் வகையில் நல்ல நிலையில் இருப்பதாக த கவல். இரண்டு படங்களும் ஜாலியாக கதை அம்சத்தில் உருவாகி இருப்பதால் வியாபாரம் முடிந்துவிட்டதாக தகவல்.