20 அடி ஆழத்தில் ஆடையின்றி நடித்த ஆர்யா | பிளாஷ்பேக்: மாற்றங்கள் பல கடந்து, மகத்தான வெற்றியைப் பதிவு செய்த எம் ஜி ஆரின் “ரிக்ஷாக்காரன்” | போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி உருவாகியுள்ள 'முதற்கனல்' | சமந்தா படத்தின் முதல் சிங்கிள் ஏப்., 19ல் வெளியீடு | ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புராண படம் | 'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? அந்த 3 இயக்குனர்களும் பிஸியாமே? | ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் |

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற 'எதிர்நீச்சல்' தொடரின் 2ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் மாரிமுத்து கேரக்டருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த நிலையில் திடீரென அவர் மரணமடைய, ஆதி குணசேகரன் என்ற அந்த கேரக்டருக்கு நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி வந்தார். இவரது மனைவியாக நடித்து வந்தார் நடிகை கனிகா. ஒரு கட்டத்தில் அவர் விலகி விட்டார்.
கனிகா விலகியதற்கான காரணத்தை அவரும் சொல்லவில்லை, தயாரிப்பு தரப்பும் சொல்லவில்லை. இதனால் பல காரணங்கள் யூகங்களாக சொல்லப்பட்டது. இதற்கிடையில் தயாரிப்பு தரப்பு மீண்டும் கனிகாவை அழைத்து வர முயற்சித்தது, அதுவும் நடக்கவில்லை. கனிகா தற்போது இன்னொரு சேனல் நடத்தும் நிகழ்ச்சிக்கு நடுவராக சென்று விட்டார்.
இந்த நிலையில் கனிகா நடித்து வந்த ஈஸ்வரி கேரக்டரில் ஸ்ரீஜா நடித்து வருகிறார். 'பொம்மலாட்டம்' உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் இவர். இவர் நடித்த எபிசோட்கள் வரும் வாரங்களில் இருந்து ஒளிபரப்பாக இருக்கிறது. கனிகா இடத்தை ஸ்ரீஜா பிடிப்பாரா என்பது இன்னும் ஒரு சில வாரங்களில் தெரிந்து விடும்.




