20 அடி ஆழத்தில் ஆடையின்றி நடித்த ஆர்யா | பிளாஷ்பேக்: மாற்றங்கள் பல கடந்து, மகத்தான வெற்றியைப் பதிவு செய்த எம் ஜி ஆரின் “ரிக்ஷாக்காரன்” | போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி உருவாகியுள்ள 'முதற்கனல்' | சமந்தா படத்தின் முதல் சிங்கிள் ஏப்., 19ல் வெளியீடு | ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புராண படம் | 'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? அந்த 3 இயக்குனர்களும் பிஸியாமே? | ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் |

சின்னத்திரை நடிகை சுபிக்ஷா தற்போது 'வீரா' என்ற தொடரில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் 'பேமிலி படம்' என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. அதில் சுபிக்ஷாவின் நடிப்பும் பேசப்பட்டது. அடுத்த வாய்ப்புகள் அமையாததால் தற்போதும் அவர் 'வீரா' தொடரில் நடித்து வருகிறார்.
ஆனால் விரைவில் 'வீரா' தொடரில் சுபிக்ஷாவின் கேரக்டர் முடியப்போகிறது என்றும் அவராகவே விலகி கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சுபிக்ஷா கூறியிருப்பதாவது:
வீரா தொடரில் திட்டமிட்டபடி எனது கேரக்டர் முடிவிற்கு வருகிறது. நான் விரும்பினால் கேரக்டரை நீட்டிப்பதாக சொன்னார்கள் வேண்டாம் என்று கூறிவிட்டேன். தயாரிப்பு தரப்பு, சேனல் தரப்பு இரண்டிடமும் சுமுகமாக பேசி மகிழ்ச்சியாக விலகுகிறேன். காரணம் இப்போது எனக்கு சினிமா, வெப் தொடர் வாய்ப்புகள் அதிகம் வருகிறது. அதோடு நான் யோகி பாபு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படம் விரைவில் வெளிவருகிறது. அந்த படம் எனக்கு ஒரு திருப்பத்தை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்றார்.




