மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

சாய் ராம் ஏவி.ஆர் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ்பிஎம் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் அன்னா ஆஷா , சாய் ஷரண் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'எஸ்.கே.எஸ்'. அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா , அன்னா ஆஷா, கீர்த்தி , சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.
மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ், ராஜ் மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஷகிலா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சாய் பிரபா மீனா இயக்கி உள்ளார். பால்பாண்டி - ஜூஜூ மற்றும் முத்து ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனீஷ் - அலெக்ஸ் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் கூறும்போது '' இந்த படம் பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இன்றைய சூழலில் ஒவ்வொரு பெண்ணும் மற்றவர்களை நம்பாமல் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான புதிய வழிமுறைகளை பற்றி அவர்களே சுயமாக சிந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பதை அழுத்தமாக சொல்லும் படம்'' என்றார்.