மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

பிரபல பாலிவுட் முன்னாள் நடிகை சங்கீதா பிஜ்லானி. ஒருகாலத்தில் நடிகர் சல்மான்கான் உடன் இணைந்து காதல் கிசுகிசுகளில் சிக்கிய இவர், பின்னர் கிரிக்கெட் வீரர் அசாருதீனை திருமணம் செய்து கொண்டு 15 வருடங்கள் திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்றார்.
இந்த நிலையில் புனே அருகில் பாவனா டேம் அருகில் இவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கடந்த ஜூலை மாதம் சில மர்ம நபர்கள் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தையும் தொலைக்காட்சி உள்ளிட்ட சில பொருட்களையும் எடுத்து சென்றனர். இதுகுறித்து அப்போது காவல்துறையில் புகார் அளித்திருந்தார் சங்கீதா பிஜ்லானி.
ஆனால் கடந்த மூன்று மாதங்களாக இந்த வழக்கில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாததாலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததாலும் சமீபத்தில் உயர் போலீஸ் அதிகாரியை சந்தித்து தன்னுடைய புகார் எந்த நிலையில் என்பது குறித்து விசாரித்து அறிந்துள்ளார். அது மட்டுமல்ல கிட்டதட்ட 20 வருடங்களாக தான் அந்த பகுதியில் வசித்து வருவதாகவும் தற்போது கடந்த மூன்று மாதங்களாகவே தனக்கு அங்கே வசிப்பதற்கு ஏதோ அச்சுறுத்தல் இருப்பது போல தோன்றுவதாகவும் கூறி தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி தேவைப்படுவதாக கூறி அதற்கான உரிமத்திற்கும் விண்ணப்பித்துள்ளாராம் சங்கீதா பிஜ்லானி.