50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி |
‛‛காக்கா முட்டை, கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி'' போன்ற படங்களை இயக்கியவர் மணிகண்டன். இவற்றில் காக்கா முட்டை, கடைசி விவசாயி போன்ற படங்களுக்காக தேசிய விருது வாங்கினார். இவரது மதுரை, உசிலம்பட்டி வீட்டில் திருட்டு நடந்துள்ளது. 2 தேசிய விருதுக்கான பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன். இவரது வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி, தேனி ரோட்டில் உள்ள எழில் நகரில் உள்ளது. திரைப்பட வேலை காரணமாக இரண்டு மாதங்களாக குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
அவரது வீட்டில் உள்ள நாய்க்கு மணிகண்டனின் ஓட்டுநர்களான ஜெயக்குமார், நரேஷ்குமார் ஆகிய இருவரும் தினசரி வந்து நாய்க்கு உணவு வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தாக கூறப்படுகிறது. நேற்று மாலை 4 மணியளவில் நாய்க்கு உணவு வைக்க வந்த நரேஷ்குமார் வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் வீட்டின் பீரோவில் இருந்த கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசு வழங்கிய இரு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள இயக்குனர் மணிகண்டன் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னரே மேலும் பணம், நகை ஏதும் கொள்ள போனதா என தெரிய வரும். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.