ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் அறிமுகமானவர் நடிகை அன்னா பென். அதை தொடர்ந்து வெளியான ஹெலன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இவரது நடிப்பையும் பேச வைத்தது. தமிழில் அடியெடுத்து வைத்துள்ள இவர் தற்போது சூரிக்கு ஜோடியாக கொட்டுக்காளி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
தமிழைத் தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் நுழைந்துள்ள அன்னா பென், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல் இருவரும் நடித்து வரும் கல்கி 2898 ஏடி என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் நாக் அஸ்வினுடன் நடைபெற்ற ஒரு வீடியோ சாட்டிங் மூலமாக இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு தேடி வந்தது என்றும், தெலுங்கில் அறிமுகமாவதற்கு இதைவிட ஒரு அற்புதமான வாய்ப்பு தனக்கு கிடைத்து விடுமா என்றும் கூறியுள்ள அன்னா பென் முதன் முதலாக சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசையும் நிறைவேறி விட்டதாக கூறியுள்ளார்.