ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

நடிகை ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்று அதன் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்து தற்போது அங்கேயும் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரன்பீர் கபீருடன் அவர் இணைந்து நடித்த அனிமல் என்கிற திரைப்படம் வெளியாகி ரூ.900 கோடி வசூலை தொட்டது. இதனை தொடர்ந்து ராஷ்மிகா தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி விட்டார் என்று மீடியாக்களில் ஒரு செய்தி வெளியானது. அப்படி சோசியல் மீடியாவில் அவர் நான்கு முதல் இருந்து நான்கரை கோடி சம்பளம் கேட்பதாக ஒரு செய்தி வெளியானது.
ஆச்சரியமாக இந்த செய்திக்கு பதில் அளித்துள்ள ராஷ்மிகா, “இதை பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. இவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல நானும் இதை தயாரிப்பாளர்களிடம் இதே அளவில் சம்பளம் கேட்கலாம் என நினைக்கிறேன். அவர்கள் என்னிடம் ஏன் என கேட்டால் மீடியாவில் இப்படி ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது சார்.. அதனால் அவர்களுடைய வார்த்தைப்படி நான் வாழ வேண்டும் என நினைக்கிறேன்.. நான் என்ன செய்யட்டும் என அவர்களுக்கு பதில் அளிக்க போகிறேன்” என்று நகைச்சுவையாக இந்த செய்தியை அணுகியுள்ளார்.




