‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் மணிகண்டன் கூட்டணியில் ‛ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி' போன்ற படங்கள் உருவாகின. அடுத்து இவர்கள் கூட்டணியில் ஒரு வெப் தொடர் உருவாகிறது. இதை விஜய் சேதுபதியே தயாரிக்கிறார். டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பணிகள் நடந்து வந்த நிலையில் நேற்று படத்தின் டப்பிங் பணி துவங்கியதாக அறிவித்தனர். இந்நிலையில் இந்த வெப் தொடருக்கு 'முத்து என்கிற காட்டான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.
இது கிராமத்து பின்னனியில் உருவாகும் பெரிய பட்ஜெட் வெப் தொடர் என்கிறார்கள். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராப் மற்றும் நடிகர் யோகி பாபு நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.