Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

என் படத்திற்கு ‛ஜானகி' டைட்டிலை அனுமதித்த சென்சார், சுரேஷ்கோபி படத்தை எதிர்ப்பது ஏன்? இயக்குனர் ஆதங்கம்

05 ஜூலை, 2025 - 10:37 IST
எழுத்தின் அளவு:
Why-is-the-censor-who-allowed-the-title-Janaki-for-my-film-objecting-to-Suresh-Gopis-film-Director-doubts
Advertisement

மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் நீண்டகால தயாரிப்பாக இருந்த ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா) திரைப்படம் கடந்த ஜூன் 27ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகள் படத்தின் டைட்டிலில் இடம் பெற்றுள்ள ஜானகி என்கிற பெயரை மாற்றுமாறு வாய்மொழியாக அறிவுறுத்தினார்கள். அதற்கு மறுத்த படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டு நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்து உள்ளனர். நீதிபதியும் சென்சாரின் இந்த போக்கு குறித்து பல கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார். அது மட்டுமல்ல நேற்று (ஜூலை 5) இந்த படத்தை சிறப்பு காட்சியாக பார்த்துவிட்டு இது குறித்த தீர்ப்பை அவர் வழங்க இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த 2023ல் மலையாளத்தில் ஜானகி ஜானே என்கிற படம் வெளியானது. நடிகை நவ்யா நாயர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் அனீஸ் உபாசனா என்பவர் இயக்கியிருந்தார். அவருக்கு இது முதல் படம். தற்போது சுரேஷ் கோபியின் இந்த ஜானகி டைட்டில் விவகாரம் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து அனீஸ் உபாசனா சில கருத்துக்களை கோரியுள்ளார்.

அவர் கூறும்போது, “கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தான் எனது படமும் சுரேஷ் கோபியின் படமும் படப்பிடிப்பு நடைபெற்றது. நாங்கள் 2023ல் ரிலீஸ் செய்வதற்காக சென்சருக்கு அனுப்பியபோது சில காட்சிகளை மட்டும் மாற்றம் செய்ய சொன்னார்களே தவிர ஜானகி என்கிற டைட்டில் பற்றி அவர்கள் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் இப்போது சுரேஷ் கோபி நடித்திருக்கும் இந்த படத்திற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில் கூட ஜானகி என்கிற டைட்டிலை மாற்ற எதற்காக சென்சார் போர்டு விடாப்பிடியாக நிற்கிறது என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. நீதிமன்றம் மூலமாக இந்த படத்திற்கு ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர்மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி ... இயக்குனர் ரஞ்சித் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை தள்ளுபடி செய்த கர்நாடக நீதிமன்றம் இயக்குனர் ரஞ்சித் மீதான பாலியல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in