பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

மலையாளத்தில் கடந்த வருடம் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான படம் மார்கோ. அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக வெளியான இந்த படம் அதீத வன்முறை காட்சிகள் நிறைந்த படமாகவும், கடுமையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் ரசிகர்களின் வரவேற்பு பெற்று நூறு கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. ரசிகர்கள் ஒரு பக்கம் பாராட்டினாலும் இன்னும் ஒரு தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் இந்த படத்திற்கு நிறைய எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பின.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதற்கு இரண்டாம் பாகம் உருவாகும் என்று ஏற்கனவே தயாரிப்பாளரும், நடிகர் உன்னி முகுந்தன் கூறி இருந்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு இந்த இரண்டாம் பாகத்தில் நான் நடிக்க விரும்பவில்லை, அந்த அளவிற்கு முதல் பாகத்தில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து விட்டேன், அதனால் ரசிகர்கள் என் மீது வருத்தப்பட வேண்டாம்” என்று உன்னி முகுந்தன் கூறினார். இதனை தொடர்ந்து சமீப நாட்களாகவே ரசிகர்கள் இந்த படத்தின் தயாரிப்பாளரிடம் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உங்களால் தயாரிக்க முடியவில்லை என்றால் தயவு செய்து உங்களிடம் உள்ள மார்க்கோ குறித்த உரிமைகளை இன்னொரு படக்குழுவிற்கு விற்று விடுங்கள் என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் அவர் கூறும்போது, “மார்கோ படத்தின் அடுத்த பாகம் உருவாக்குவது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன எங்களது கியூப் என்டர்டெயின்மென்ட்ஸ் தான் இந்த மார்க்கோ படத்திற்கான உரிமைகள் அனைத்தையும் சொந்தமாக வைத்திருக்கிறோம். அதற்கான பெருமையை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். இரண்டாம் பாகத்திற்கான உரிமையை யாருக்கும் விட்டுக் கொடுப்பதாகவும் இல்லை” என்று கூறியுள்ளனர்.
படத்தின் கதாநாயகனாக நடித்த உன்னி முகுந்தனே இதிலிருந்து விலகுவதாக கூறிய பின்னரும். தயாரிப்பாளர் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் இருப்பதாக தயாரிப்பாளர் உறுதி அளித்து இருப்பது ஆச்சரியத்தை எழுப்பி உள்ளது.