செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் நீண்டகால தயாரிப்பாக இருந்த ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா) திரைப்படம் கடந்த ஜூன் 27ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகள் படத்தின் டைட்டிலில் இடம் பெற்றுள்ள ஜானகி என்கிற பெயரை மாற்றுமாறு வாய்மொழியாக அறிவுறுத்தினார்கள். அதற்கு மறுத்த படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டு நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்து உள்ளனர். நீதிபதியும் சென்சாரின் இந்த போக்கு குறித்து பல கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார். அது மட்டுமல்ல நேற்று (ஜூலை 5) இந்த படத்தை சிறப்பு காட்சியாக பார்த்துவிட்டு இது குறித்த தீர்ப்பை அவர் வழங்க இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 2023ல் மலையாளத்தில் ஜானகி ஜானே என்கிற படம் வெளியானது. நடிகை நவ்யா நாயர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் அனீஸ் உபாசனா என்பவர் இயக்கியிருந்தார். அவருக்கு இது முதல் படம். தற்போது சுரேஷ் கோபியின் இந்த ஜானகி டைட்டில் விவகாரம் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து அனீஸ் உபாசனா சில கருத்துக்களை கோரியுள்ளார்.
அவர் கூறும்போது, “கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தான் எனது படமும் சுரேஷ் கோபியின் படமும் படப்பிடிப்பு நடைபெற்றது. நாங்கள் 2023ல் ரிலீஸ் செய்வதற்காக சென்சருக்கு அனுப்பியபோது சில காட்சிகளை மட்டும் மாற்றம் செய்ய சொன்னார்களே தவிர ஜானகி என்கிற டைட்டில் பற்றி அவர்கள் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் இப்போது சுரேஷ் கோபி நடித்திருக்கும் இந்த படத்திற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில் கூட ஜானகி என்கிற டைட்டிலை மாற்ற எதற்காக சென்சார் போர்டு விடாப்பிடியாக நிற்கிறது என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. நீதிமன்றம் மூலமாக இந்த படத்திற்கு ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.