மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

மலையாளத்தில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் தற்போது மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார் நடிகர் சுரேஷ்கோபி. இவரது இரண்டு மகன்களில் மூத்தவர் கோகுல் சுரேஷ். கடந்த சில வருடங்களாகவே முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரது இளைய மகன் மாதவ் சுரேஷ். தற்போது நடிப்பில் களம் இறங்கி சமீபத்தில் தனது தந்தையின் நடிப்பில் வெளியான ‛ஜேஎஸ்கே' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் மாதவ் சுரேஷை திருவனந்தபுரம் போலீசார் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரித்தார்கள் என்கிற ஒரு தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பாக வெளியானது.
அதாவது சமீபத்தில் நள்ளிரவில் மாதவ் சுரேஷ் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது எதிரில் கேரளாவை சேர்ந்த ஒரு கட்சியின் தலைவரான வினோத் கிருஷ்ணா என்பவரது காருடன் மோதி விபத்து ஏற்படும் சூழல் உருவானது. இதனை தொடர்ந்து இருவரும் காரில் இருந்து இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு வந்த போலீசார் மாதவ் சுரேஷிடம் அவர் மது அருந்தி இருக்கிறாரா? என சோதனை செய்வதற்காக அவரை கஸ்டடியில் எடுத்து போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள் என்றும் அதன்பிறகு அவர் மது அருந்தவில்லை என தெரிய வந்ததும் அவரை விடுவித்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பது குறித்து மாத சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
“அன்று இரவு எங்கள் இருவருக்கும் கார் ஓட்டியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு இருவருமே ஒருவர் மீது ஒருவர் தவறு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டோம். கேரள போலீஸார் எல்லாமே அழகிய ஆப்பிள்கள் போன்றவர்கள். ஆனால் அதற்குள்ளும் சில அழுகிய ஆப்பிள்கள் இருப்பது போல, இந்த சம்பவத்தின் போது அங்கு வந்த போலீஸ் அதிகாரி வினோத் கிருஷ்ணா என் மீது எந்த புகாரும் அளிக்காத நிலையில் கூட வேண்டுமென்றே என்னை ஜீப்பில் ஏறச் சொன்னதுடன் அதை மற்றவர்கள் வீடியோ எடுக்க வேண்டும் என்பது போன்ற நோக்கத்துடன் நடந்து கொண்டார்.. அங்கு இருந்தவர்கள் அனைவருக்குமே தெரியும் என்ன நடந்தது என்று. ஆனால் வெளியில் இருப்பவர்கள் யாருக்குமே உண்மை என்ன என்று தெரிந்து கொள்ளும் கவலை துளியும் இல்லை” என்று கூறியுள்ளார்.




