சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் |
மலையாளத்தில் சீனியர் நடிகரும் தற்போதைய மத்திய அமைச்சருமான சுரேஷ்கோபி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜேஎஸ்கே' (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா). இந்த படம் கடந்த ஜூன் 27ம் தேதியே வெளியாவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக சென்சார் சான்றிதழுக்காக அனுப்பப்பட்ட போது படத்தின் டைட்டிலில் ஜானகி என்கிற பெயர் இடம் பெறுவதை சென்சார் அதிகாரிகள் ஆட்சேபித்து அதை மாற்றுமாறு வலியுறுத்தினார்கள். படக்குழுவினர் அதற்கு மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்றார்கள்.
இதனைத் தொடர்ந்து சென்சார் தரப்பினர் ஜானகி என்கிற பெயர் முன்னாலோ அல்லது பின்னாலோ வி என்கிற அந்த கதாபாத்திரத்தின் (ஜானகி வித்யாதரன்) தந்தையின் இனிசியல் இடம் பெறுமாறு சேர்த்துக் கொண்டால் சான்றிதழ் தருகிறோம் என்றும், மேலும் படத்தின் கதைப்படி நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணையின் போது ஜானகி என்கிற பெயரை பயன்படுத்தாமல் மியூட் செய்ய வேண்டும் என்றும் கூறி இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரிகிறது.
இதனை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர் தரப்பும் நீதிமன்றத்தில் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்றம் இந்த படத்தின் திருத்தப்பட்ட புதிய காப்பியை மீண்டும் எப்போது சென்சார் அதிகாரிகள் பெற்றுக் கொள்கிறார்களோ. அதிலிருந்து மூன்றாவது நாள் அவர்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. படக்குழுவினரும் மீண்டும் படத்தை சென்சாருக்கு அனுப்பினர்.
இதை தொடர்ந்து படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் கூறிய திருத்தங்களை படக்குழுவினர் செய்திருந்ததை பார்த்து படத்திற்கு 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் விதமாக யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அந்த வகையில் ஒரு வழியாக ஜேஎஸ்கே படத்தின் ரிலீஸுக்கு தடையாக இருந்த மிகப்பெரிய சிக்கல் நீங்கியுள்ளது. இதை தொடர்ந்து ஜூலை 17ம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.