கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் சுரேஷ்கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் 'ஜேஎஸ்கே' அதாவது 'ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா' என்கிற படம் வெளியானது. திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான ஒரு இளம் பெண் அந்த கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என தெரியாத நிலையில் நீதிமன்றத்தின் உதவியை நாடுவது போன்று இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. படத்தில் கதாநாயகியாக நடித்த அனுபமாவின் பெயர் ஜானகி.
ஆனால் படம் சென்சார் சான்றிதழுக்காக அனுப்பப்பட்ட போது படம் பார்த்த அதிகாரிகள் ஜானகி என்கிற பெயரை டைட்டிலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் படத்தில் ஜானகி என வரும் இடங்களில் அந்த வார்த்தையை மியூட் செய்ய வேண்டும் என வாய்மொழியாக உத்தரவிட்டனர். சில வார போராட்டங்களுக்குப் பிறகு இரு தரப்பிலும் ஒரு சமரசம் ஏற்பட்டு ஜானகி என்பதற்கு முன்பாக 'வி' என்கிற எழுத்தை சேர்த்து 'வி ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா' என்கிற பெயரில் அந்த படம் வெளியானது.
இந்த நிலையில் இதேபோன்று தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் உருவாகியுள்ள ஜானகி என்கிற படமும் இதே டைட்டில் சர்ச்சையில் தற்போது சிக்கியுள்ளது. சத்தீஸ்கர் மொழியில் எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது ஹிந்திக்கு மாற்றப்பட்டு சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படம் பார்த்த அதிகாரிகள் முதலில் பல காட்சிகளுக்கு கட் சொல்லிவிட்டு அதன் பிறகு 'யுஏ 16 பிளஸ்' சான்றிதழ் வழங்கலாம் என கூறினார்கள்.
ஆனால் இந்த மாற்றங்களை செய்து வந்தபோது சென்சார் அதிகாரிகள் இந்த படத்தின் டைட்டிலில் இடம்பெறும் ஜான்கி என்கிற வார்த்தை ராமாயண நாயகி சீதாவை குறிப்பதாகவும் அதேபோல படத்தின் நாயகனாக ரகுராம் என்கிற பெயர் இருப்பதால் அது ராமனை குறிப்பதாகவும் கூறி இந்த இரண்டு பெயர்களையும் மாற்றும்படி கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து படக்குழுவினர் தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகி நீதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து விசாரித்த நீதிமன்றம் இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி சென்சார் போர்டுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.