சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
டி.எஸ்.பாலையா தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர். அவர் இடத்தை இன்னொருவரால் பிடிக்கவே முடியாது. அவரும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த படங்கள் மிகவும் குறைவுதான். ஆனாலும் இருவருக்குள்ளும் ஆழமான நட்பு இருந்தது. அதற்கு ஒரு சின்ன உதாரணம் இது.
1948ம் ஆண்டு வெளிவந்த படம் மோகினி, சதிலீலாவதியில் அறிமுமான எம்.ஜி.ஆரும், டி.எஸ்.பாலையாயும் இதில் ஹீரோக்களாக நடித்தார்கள். வி.என்.ஜானகி, எம்.என்.நம்பியார் நடித்தர்கள். ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்தது. இதில் யார் ஹீரோ, டைட்டில் கார்டில் யார் பெயரை முதலில் போடுவது என்ற பிரச்சினை வந்தது. அப்போது டி.எஸ்.பாலையா "ராமச்சந்திரன்தானப்பா ஹீரோ... அவன்தானே அழகாக இருக்கான்.... அழகா இருக்கான்... நான் துணை ஹீரோவாக இருக்கிறேன்" என்று கூறிவிட்டார். இந்த விட்டுக்கொடுத்தல் எம்.ஜி.ஆருக்கு பாலையை மீது நட்பை உருவாக்கியது.
இடையில் சில காலம் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்தார் டி.எஸ்.பாலையா. அப்போது கற்பகம் படத்தில் ஹீரோவாக நடிக்க எம்.ஜி.ஆரை கேட்டார் இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன். அதற்கு எம்.ஜி.ஆர் "கதையில் வரும் மாமனார் கேரக்டரில் டி.எஸ்.பாலையா நடிப்பதாக இருந்தால் நான் நடிக்கிறேன்" என்றார். "அந்த கேரக்டருக்கு வி.எஸ்.ரங்காராவ்தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை புக் செய்து விட்டோம்" என்று
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறினார். "அப்படியானால் வேறு யாரையாவது நடிக்க வைத்து படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார் எம்.ஜி.ஆர். அதன் பிறகே கற்பகம் படத்தில் ஜெமினி கணேசன் நடித்தார்.