செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் மார்ச் 30ம் தேதி வெளிவந்த படம் 'சிக்கந்தர்'. படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வந்தாலும், மோசமில்லாத வசூல் படத்திற்குக் கிடைத்து வருகிறது.
படம் வெளியான முதல் நாளில் 54 கோடியே 72 லட்சம் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நேற்று இரண்டாவது நாள் முடிவில் படத்தின் வசூல் 100 கோடியைக் கடந்துள்ளது. இரண்டாவது நாளுடன் சேர்த்து மொத்தம் 105 கோடியே 89 லட்சம் வசூலித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவில் 39 கோடியே 37 லட்சமும், வெளிநாடுகளில் 11 கோடியே 80 லட்சமும் வசூலித்துள்ளதாம். சல்மான் கான் நடித்து இதுவரை வெளியான படங்களில் 17 படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன. தற்போது 18வது படமாக 'சிக்கந்தர்' படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
300 கோடி வசூல் கடந்த படங்களாக 'பஜ்ரங்கி பைஜான், சுல்தான், டைகர் ஜிந்தா' ஆகிய படங்களும், 200 கோடி வசூல் கடந்த படங்களாக 'கிக், பிரேம் ரதன் தான் பாயோ, பாரத்' ஆகிய படங்களும் உள்ளன.