மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான ஹிந்திப் படம் 'சிக்கந்தர்'. இப்படத்திற்கு பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்கள்தான் அதிகம் வெளிவந்தது. ஒரு 'அவுட்டேட்டட்' படம் என்பதுதான் பெரும்பாலோனார் கருத்தாக இருந்தது.
இருந்தாலும் படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் மோசமில்லாத அளவிற்கு ரூ.54.72 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளன. இந்தியளவில் ரூ.35.47 கோடி, உலகளவில் ரூ.19.25 கோடி வசூலித்துள்ளது.
2023ல் சல்மான் கான் நடித்து வெளிவந்த 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படத்தின் முதல் நாள் இந்திய வசூல் 15 கோடி மட்டுமே. அதனுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கு வசூலை 'சிக்கந்தர்' படம் கொடுத்துள்ளது.
சல்மானின் முதல் நாள் அதிக வசூல் என்று பார்த்தால் 2019ல் வெளிவந்த 'பாரத்' படம் 42 கோடி வசூலித்துள்ளது. அதை முறிடிக்க முடியாத அளவிற்குத்தான் 'சிக்கந்தர்' வசூல் உள்ளது. படம் எப்படியும் 100 கோடி வசூலைக் கடந்துவிடும். ஆனால், படத்தின் பட்ஜெட் 200 கோடி என்பதால் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தால் மட்டுமே படம் லாபத்தைப் பெற முடியும்.