‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான ஹிந்திப் படம் 'சிக்கந்தர்'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். படத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். 'அவுட்டேட்டட்' கதை, காட்சிகள் என படம் போரடிக்க வைத்துள்ளது.
ஷங்கர் போல ஏஆர் முருகதாஸும் இப்படி ஏமாற்றிவிட்டாரே என தமிழ் ரசிகர்களும் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஷங்கர் இயக்கத்தில் கடந்த வருடம் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'இந்தியன் 2', ராம் சரண் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' ஆகிய இரண்டு படங்களுமே 'அவுட்டேட்டட்' என்ற விமர்சனத்தைத்தான் பெற்றன. அதேபோல 'சிக்கந்தர்' படமும் அமைந்துவிட்டது.
ஏஆர் முருகதாஸ் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்க 'மதராஸி' என்ற படத்தையும் இயக்கி வருகிறார். 'சிக்கந்தர்' படத்தைப் பார்த்து மிரண்டு போயுள்ளவர்கள் தற்போது 'மதராஸி' படம் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.