அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் |
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடித்து கடந்த 2006ம் ஆண்டில் இவரது தந்தை ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் கிரிஷ் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இதன் அடுத்த பாகங்கள் இவர்கள் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்றன.
இந்த நிலையில் ராகேஷ் ரோஷன் அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "ஹிருத்திக் 25 வருடத்திற்கு முன்பு நான் உன்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினேன். இப்போது ஹிருத்திக் ரோஷன் இயக்குனராக கிரிஷ் 4ம் பாகத்தின் மூலம் அறிமுகமாகிறார்'' என அறிவித்துள்ளார்.
இந்த படத்தை ஆதித்யா சோப்ரா மற்றும் ராகேஷ் ரோஷன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். பிரமாண்ட படமாக பெரிய பட்ஜெட்டில் கிரிஷ் 4 தயாராகிறது.