புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
ஹிந்தியில் எடுக்கப்படும் வாழ்க்கை வரலாற்று படங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்துவதோடு வசூலையும் குவிக்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் சர்ச்சைகளை சந்திக்க தயாராகி படங்களை தயாரிக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து தயாராகிறது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்க்கை வரலாற்று சினிமா. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்திரா, மறைந்த முதல் அமைச்சர்கள் ஜெயலலிதா, என்.டி.ராமராவ் உள்ளிட்ட பலரது வாழ்க்கை படங்கள் வரிசையில் இந்த படமும் இணைகிறது.
'அஜய் : தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் யோகி' என்று படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் யோகி ஆதித்யநாத் வேடத்தில் அனந்த் ஜோஷி நடிக்கிறார். பரேஷ் ராவல், தினேஷ் லால் யாதவ், அஜய் மெங்கி, பவன் மல்கோத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரவீந்திர கவுதம் இயக்குகிறார்.
இந்த படத்தில் யோகி ஆதித்யநாத் துறவியாக இருந்து எப்படி முதல்வர் ஆனார் என்பது காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர். அதில், ''எல்லாவற்றையும் அவர் துறந்தார். ஆனால் மக்கள் அவரை தங்களுடையவராக ஆக்கிக் கொண்டனர்'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.