இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'சிக்கந்தர்' ஹிந்திப் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தியேட்டர்களில் படம் வெளியாவதற்கு முன்பே நேற்றிரவு பைரசி இணையதளங்களில் இப்படம் வெளியாகி உள்ளது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
படம் வெளியான சில நாட்களுக்குப் பிறகுதான் இப்படியான பைரசி இணையதளங்களில் படங்கள் வெளியாகும். ஆனால், வெளியீட்டிற்கு முன்பே வெளியாகி இருப்பதில் ஏதோ ஒரு சதி நடந்திருப்பதாக படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாரான ஒரு படத்தை இப்படி மிக எளிதாக இணையதளங்களில் வெளியிடுவது சரியல்ல என திரையுலகினர் கொதிக்கிறார்கள். ஹிந்திப் படங்கள் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களும் வெளியான சில நாட்களில் பைரசி இணையதங்களில் வெளியாகிறது. இதைத் தடுக்க முடியாமல் இருப்பதால் திரையுலகினர் கோடிக்கணக்கில் நஷ்டமடைகிறார்கள்.